×

தா.பழூர் அருகே இடிவிழுந்ததில் கோயில் கோபுரத்தில் விரிசல் கலசம் கீழே விழுந்தது

தா.பழூர்: தா.பழூர் அருகே வாழைக்குறிச்சி கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த மழையின்போது இடி விழுந்ததில் கோயில் கோபுரம் விரிசல் ஏற்பட்டு கோபுர கலசம் கீழே விழுந்தது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த கருப்பசாமி, அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயில் கடந்த 13 வருடத்திற்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் அப்பகுதியில் நேற்றுமுன்தினம் இடி மின்னலுடன் மழையானது இரவு 11 மணி வரை பெய்து வந்தது. சுமார் 8.30 மணி அளவில் அப்பகுதியில் பலத்த சத்ததுடன் இடி விழுந்துள்ளதாக தெரிகிறது. மழை காரணமாக யாரும் வெளியில் வரவில்லை.

இந்த நிலையில் அய்யனார் கோயில் பூசாரி அண்ணாதுரை நேற்று காலை வழக்கம்போல் பூஜை செய்ய வந்தபோது, கோயில் கோபுரம் இடிந்து கலசம் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் ஊர் முக்கியஸ்தர்களிடம் சென்று கூறியுள்ளார். அப்போது ஊர் முக்கியஸ்தர்கள் பார்த்தபோது இரவு இடி விழுந்ததில் கோயில் கோபுரம் இரண்டாக பிளந்து சிதைந்து கோயில் கலசம் கீழே விழுந்தது தெரிய வந்தது.

Tags : Dhaka ,landslide ,temple tower , Dhapazhur, temple tower, urn
× RELATED பூர்ண கலசம்