×

2023-ம் ஆண்டு நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிக்கான சூப்பர் லீக் தகுதிச்சுற்று: ஐசிசி அறிமுகம்

துபாய்: 2023-ம் ஆண்டு நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டித்தொடரில், சூப்பர் லீக்கில் பங்கேற்கும் அணிகளுக்கான தகுதிச் சுற்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிமுகம் செய்தது. 50 ஓவர்கள் கொண்ட உலகக்கோப்பை கிரிக்கெட் ஒருநாள் போட்டி தொடரில் 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் 7 இடங்களில் இருக்கும் அணிகள், போட்டியை நடத்தும் இந்திய அணி ஆகியவை நேரடியாகத் தகுதி பெறும். அந்த வகையில் தரவரிசையில் முதல் 7 இடங்களில் இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் உள்ளன. போட்டியை நடத்தும் இந்திய அணி நேரடியாக தகுதி பெறும். ஐசிசியில் முழு உறுப்பினராக இருக்கும் 12 அணிகளில் 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிடுகின்றன. மீதமுள்ள 4 அணிகள் அதாவது மே.இ.தீவுகள், ஆப்கானிஸ்தான், ஓமன், அயர்லாந்து ஆகியவை மற்றும் 2015-17 உலகக் கிரிக்கெட் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற நெதர்லாந்து ஆகிய 5 அணிகளுக்கும் இடையே தகுதிச்சுற்று நடத்தப்பட்டு அதில் முதல் இரு இடங்களைப்பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் தகுதி பெறும்.

இந்த 5 அணிகளுக்கும் இடையிலான தகுதித்சுற்றைத்தான் ஐசிசி இன்று அறிமுகம் செய்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், நெதர்லாந்து உள்பட 5 அணிகளுக்கும் இடையே தகுதிச்சுற்று நடத்துவது என்பது கடினமானது. இந்த 5 அணிகளும், தங்களுக்குள் மோதும் போட்டித்தொடர்கள், மற்றும் ஏற்கெனவே தகுதிபெற்ற 8 அணிகளுடன் மோதும் போட்டிகளும் தகுதிச்சுற்றாகவே கருதப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. வழக்கமான தகுதிச்சுற்று என்பது 5 அணிகளுக்கு இடையே மட்டும்தான் நடத்தப்படும். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 8 அணிகளுடன் இந்த 5 அணிகள் மோதும் வழக்கமான கிரிக்கெட் தொடரைக் கூட தகுதிச்சுற்றாகக் கருதப்படுகிறது.

அதன்படி முதல் தகுதிச்சுற்று வரும் 30-ம் தேதி இங்கிலாந்து-அயர்லாந்து இடையே நடக்கிறது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றுவிட்டது. இருப்பினும், இங்கிலாந்து-அயர்லாந்து ஒருநாள் தொடர், அயர்லாந்து அணிக்கு தகுதிச்சுற்றாக மாற்றப்பட்டுள்ளது. இதில் அயர்லாந்து அணிகள் பெறும் வெற்றி தகுதிச்சுற்றுக்கான புள்ளியாகக் கருதப்படும். முதல் கட்டமாக இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான அட்டவணையை மட்டும் ஐசிசி அறிவித்துள்ளது. அடுத்தகட்ட அட்டவணையைப் பின்னர் அறிவிப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

5 அணிகளும் தாங்கள் மோதும் போட்டியில் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் 10 புள்ளிகள் தரப்படும். போட்டி சமனில் முடிந்தால் அல்லது ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா 5 புள்ளிகள் வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக 5 அணிகளும் 8 ஒருநாள் தொடரில் விளையாட வேண்டியது இருக்கும். முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் சமமான புள்ளிகள் எடுத்தால் மற்ற ஆட்டங்களில் குவித்த ரன் ரேட் கணக்கில் கொள்ளப்படும்.



Tags : Super League ,ODI Cricket World Cup ,debut ,ICC ,Cricket , ICC, Cricket, World Cup
× RELATED மே 4ல் ஐஎஸ்எல் பைனல்: நாக் அவுட் சுற்றில் சென்னை