×

புகார் அளித்தும் பயனில்லை கைக்கு எட்டும் தூரத்தில் செல்லும் மின்கம்பிகள்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மின் கம்பி ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்வதால், அச்சமடைந்த பொதுமக்கள் விரைந்து சரி செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே செட்டியமடை கருப்பன் கோவில் பகுதியில் சாலையின் அருகே மின் கம்பி தாழ்வாக செல்கிறது. இதனால் உயிர் சேதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் மக்கள், சிறிய கவனகுறைவாக எதிர்பாராத விதமாக கைகளை தூக்கினால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

இதனை சம்மந்தப்பட்ட துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றும், இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளன. விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏதேனும் ஏற்படுவதற்கு முன் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags : arm , power lines
× RELATED கொடைக்கானல் செல்ல இன்று முதல் இ-பாஸ் தேவையில்லை