×

ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்து அதிரடி திருப்பம்!: கெலாட் அரசை எதிர்த்து வாக்களிக்க பகுஜன் சமாஜ் உத்தரவு..!!

ஜெய்ப்பூர்: பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்திருப்பது ராஜஸ்தான் அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைக்க கடுமையாக போராடி வருகிறது. இந்த நிலையில் தங்கள் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் காங்கிரசில் இணைந்த 6 எம்.எல்.ஏக்களும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

அரசியல் அமைப்பு சட்ட விதிகளின் படி, 6 எம்.எல்.ஏக்களும் பகுஜன் சமாஜ் கட்சியிலேயே தொடர்வதாக கூறியுள்ள சந்திரா மிஸ்ரா, உத்தரவை மீறினால் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்து சந்திரா மிஸ்ரா தெரிவித்ததாவது, பகுஜன் சமாஜ் ஒரு தேசிய கட்சியாகும். இந்த கட்சியை எந்த மாநில கட்சிகளுடனும் இணைக்க முடியாது. அரசியலமைப்பு சட்டவிதிகளின்படி ஆறு பேரும் தற்போது வரை பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்களாகவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 101 உறுப்பினர்களின் பலம் தேவை. அசோக் கெலாட்டுக்கு தற்போது 107 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் கெலாட்டுக்கு நெருக்கடி அதிகரிக்கும். அதேபோல் சுயேச்சை எம்.எல்.ஏக்கள் பின்வாங்கினாலும் கெலாட் அரசு கவிழ்ந்துவிடும்.

Tags : Rajasthan ,government ,Bahujan Samaj ,Gelad , Bahujan Samaj ,Rajasthan,Gehlot,
× RELATED வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள்: மாயாவதி அழைப்பு