×

5 ரஃபேல் போர் விமானங்கள் நாளை மறுநாள் இந்தியா வருகை : எதிரிகள் கண்ணில் எளிதில் புலப்படாத விமானங்களால் இந்திய விமானப்படைக்கு கூடுதல் பலம்!!

பாரீஸ் : இந்திய விமானப்படையின் வலிமையை மேலும் அதிகரிக்கும் வகையில், 5 ரஃபேல் போர் விமானங்கள் நாளை மறுநாள் இந்தியா வருகின்றன. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை ரூ.59,000 கோடிக்கு வாங்க 2016ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதற்கட்டமாக பிரான்சில் இருந்து 5 விமானங்கள், இன்று இந்தியா புறப்படுகின்றன. 7,364 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்திற்கு நாளை மறுநாள் இந்த விமானங்கள் வந்து சேரும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஃபேல் போர் விமானங்களை இயக்க விமானப்படையைச் சேர்ந்த 12 பேர் ஏற்கனவே பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களை தொடர்ந்து மேலும் சில பைலட்டுகள் தற்போது பயிற்சி பெற்று வருகின்றன. இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 12 விமானங்கள் டசால்ட் நிறுவனம் வழங்க உள்ளது. முதல்கட்டமாக நாளை மறுநாள் இந்தியா வரும் 5 விமானங்களும் அடுத்த மாதம் மத்தியில் முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.

எனினும் அவசியம் ஏற்பட்டால், ஒரே வாரத்தில் இந்த விமானங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவிக்கின்றன. எதிரிகளின் ரேடர்களால் எளிதில் கண்டறிய முடியாத வடிவமைப்புடன் கூடிய ரஃபேல் போர் விமானம் அதிவிரைவாக பறக்கும் ஆற்றல் கொண்டது. லடாக் தொடங்கி எல்லை பகுதிகளில் சீனாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து வாலாட்டி கொண்டு இருக்கும் நிலையில், ரஃபேல் போர் விமானங்களின் வருகை, இந்திய வான்படைக்கு மிகப்பெரும் வலிமையைச் சேர்க்கும் என்று கருதப்படுகிறது. 


Tags : India ,Indian Air Force , Raphael Warplanes, India, Enemies, Indian Air Force, Extra, Strength
× RELATED சிஏஏ சட்டம் இந்தியாவின் உள்விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி