×

பாறை மீது மோதி படகு சேதம் கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவர்கள் 10 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

ராமேஸ்வரம்: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு விசைப்படகில் 10 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை 2 மணிக்கு மனோலி தீவு கடல் பகுதியில் சென்றபோது, பாறையில் மோதி படகு சேதமடைந்தது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் ஜெயசீலன் (42), மாரியப்பன் (40), சந்திரசேகர் (42), ராம் (38), மாடசாமி (44), தர்மராஜ் (34), தங்கராஜ் (30), முருகவேல் (35), சிலுவை இன்னாசி (49), சுபாஷ் (30) ஆகியோர் படகின் மேல் பகுதியில் ஏறி நின்றனர். செல்போன் மூலம் தங்களுக்கு தெரிந்த மீனவர்களுக்கும், கியூ பிரிவு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மண்டபம் மரைன் போலீசார் நேற்று அதிகாலையில் நாட்டுப்படகு மூலம் நடுக்கடலில் தவித்த மீனவர்களை மீட்க சென்றனர்.
உச்சிப்புளியிலுள்ள கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பருந்து விமானத்தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மீனவர்களை தேடிச்சென்ற கடற்படையினர், நடுக்கடலில் படகின் மேல் தவித்துக் கொண்டிருந்த நான்கு பேரை மீட்டு மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் தளத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.மேலும், பாம்பனை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் அங்கு சென்று 6 மீனவர்களை மீட்டு கரைக்கு படகில் அழைத்து வந்தனர்.
இதற்கிடையே மரைன் போலீசாரை ஏற்றிச்சென்ற நாட்டுப்படகு வழியிலேயே இன்ஜின் பழுதாகி நடுக்கடலில் நின்றது. அவர்களையும் பாம்பனில் இருந்து படகில் சென்ற மீனவர்கள் கரைக்கு அழைத்து வந்தனர்.



Tags : fishermen ,boat capsize ,Thoothukudi , Rock, boat, Thoothukudi fishermen, helicopter
× RELATED கேரளத்தைச் சேர்ந்த 80 மீனவர்கள்...