×

குளத்தில் சிக்கிய 6வது மலைப்பாம்பு: முகவூர் மக்கள் பீதி

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே முகவூர் பகுதியிலுள்ள தொண்டைமான் குளத்தில் மீன் பிடிக்கும்போது மீன் வலையில் மலைப்பாம்பு சிக்கி வருகிறது. இதுவரை 5 மலைப்பாம்புகள் பிடிபட்டுள்ளன.  நேற்றுமுன்தினம் இரவு தொண்டைமான் குளம் அருகே சென்ற பொதுமக்கள் மலைப்பாம்பு நடமாட்டத்தை கண்டவுடன் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், வனத்துறையினர் வருவதற்கு முன்பாகவே மலைப்பாம்பை பொதுமக்கள்  பிடித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொதுமக்களிடமிருந்த 6 அடி நீளமுள்ள மலைபாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். குடியிருப்பு பகுதியில் அருகே உள்ள குளத்தில் தொடர்ந்து மலைப்பாம்பு சிக்குவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இந்த குளத்தை தூர்வாரி குப்பைகளை அகற்றுவதன் மூலம் மலைப்பாம்பு நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : pond ,Mugavoor , Pond, Mountain Snake, Mugavoor
× RELATED நாகூரில் புகழ்பெற்ற ஆண்டவர் தர்கா குளத்தில் தூய்மைப்பணி