×

ராஜபாளையத்தில் உலர் களமாக மாறுவதால் சேதமாகும் தார்ச்சாலைகள்

ராஜபாளையம்: ராஜபாளையம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் தற்போது மானாவாரி பயிரான பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை விளையவைத்துள்ளனர். ஆனால், அவற்றை உலர வைக்க விவசாயிகளுக்கு உலர்களம்இல்லை. இதனால் தார்ச்சாலையை உலர்களமாக்குவதுடன், பயிர்களை பிரித்தெடுத்து விட்டு குப்பைகளை அகற்றாததுடன், சிலர் தீவைத்து விட்டுச் செல்கின்றனர்.
இதனால் அவ்வழியே வரும் வாகனஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் தீ வைக்கப்படுவதால் தார்ச்சாலைகள் சேதமடைந்து வருகின்றன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,  உலர்களம் மற்றும் விற்பனை மையங்கள், சேமிப்பு கிடங்கு போன்றவற்றை ராஜபாளையம் விவசாயிகளுக்கு அரசு ஏற்படுத்தி தர வேண்டும். அத்துடன் விவசாயிகளின் வருவாயை பெருக்கவும், அவர்கள் பொதுசொத்துக்களை சேதம் ஏற்படுத்தாமல் இருக்கவும் அரசு உதவ வேண்டும்’’ என்றனர்.

Tags : Rajapalayam ,land , dry land, Rajapalayam
× RELATED திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது