×

குழாய் உடைந்ததால் சாலையில் வீணாக ஓடிய குடிநீர்

மதுரை: மதுரையில் குழாய் உடைந்து போனதால் குடிநீர் ரோட்டில் தேங்கி வீணாகி மக்களுக்கு பயன்படாமல் போனது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.ஆயிரத்து 400 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக மாசிவீதிகளில் மின்வயர் தரைக்கு அடியில் பதித்து நடைபாதை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக தெற்குமாசி வீதிகளில் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. அப்போது தரைக்கு அடியில் சென்ற குடிநீர் குழாய் உடைந்துவிட்டது. அதிலிருந்து குடிநீர் வெளியேறி ரோடு முழுவதும் தேங்கி விட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வரவில்ைல. இதனால் ஏராளமான குடிநீர் வீணாகியதுடன், பொதுமக்களுக்கு பயன்படுத்த முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Tags : road , Pipe broken, road, drinking water
× RELATED அரூர்- ஊத்தங்கரை சாலையில் குழாய்...