×

தடை செய்யப்பட்ட 59 செயலிகளின் 'குளோன்’ ஆக இயங்கிய 47 சீன செயலிகளுக்கு தடை : மத்திய அரசு அதிரடி!!

புதுடெல்லி: இந்திய அரசின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த மாதம் டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர், யுசி புரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனை தொடர்ந்து மேலும் பல சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயலிகளின் குளோன்’ (ஒரிஜினல் செயலியைப் போல இயங்கும் போலி) ஆக இயங்கிய 47 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து இந்தியாவில் சீனாவுக்கு எதிரான மனநிலை உருவானது. இதைதொடர்ந்து, சீனாவின் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை மத்திய அரசு கடந்த ஜூன் 29ம் தேதி தடை செய்தது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட செயலிகளின் க்ளோன்கள் அதிக அளவில் செயல்பாட்டில் இருந்தது. அதாவது உண்மையான செயலியை பிரதிபலிக்கும் வகையில் அப்படியே செயல்படும் போலி செயலிகள் பெருமளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.
குறிப்பாக இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதத்தில் டிக்டாக்கிற்கு மாற்றாக உள்ள செயலிகளின் பதிவிறக்கம் 155 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த நிலையில் தான் 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு வெள்ளி கிழமையன்று தடை விதித்துள்ளது மத்திய அரசு. அதன் பட்டியலை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும், 275 சீன செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், இந்த செயலிகளின் தகவல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இவற்றுக்கும் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது. இதனிடையே இந்தியாவை போன்றே அமெரிக்காவிலும் டிக்டாக் உள்ளிட்ட செயலிகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று செனெட் உறுப்பினர்கள் அதிபர் ட்ரம்ப்பிற்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chinese ,Government , 59 Processors, ‘Clone’, 47 Chinese Processor, Prohibition, Federal, Action
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...