×

அப்துல் கலாம் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நாம் ஒன்றிணைந்து உழைப்போம் : விஜயகாந்த்

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது புகைப்படத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மலரஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினம் இன்று!!

ஆண்டுதோறும் அப்துல் கலாம் நினைவுதினமான ஜூலை 27-ம் தேதி ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு என்ற இடத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்களும், மாணவர்களும், இளைஞர்களும் நினைவஞ்சலி செலுத்துவர். இந்தாண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெரியளவில் அப்துல் கலாம் நினைவிடத்திற்கு யாரும் செல்லவில்லை. ஆகவே அப்துல் கலாமை நினைவு கூறும் விதமாக அவரது பொன்மொழிகளையும், திருவுருவப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

விஜயகாந்த் மலரஞ்சலி


அந்த வகையில், கலாமின் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார் விஜயகாந்த். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில்,நீங்கள் உறங்கும் போது வருவது கனவல்ல உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு.நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்! போன்ற பல பொன்மொழிகளை, எப்போதும் உயரிய லட்சியத்துடன் வாழ வேண்டும் என்ற கொள்கைகளை, மாணவர்களுக்கும்,இளைஞர்களுக்கும் போதித்து, மிகச்சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்து, வழிகாட்டியவர் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்கள். இன்று அவரது 5ம் ஆண்டு நினைவு நாள், அவரது நினைவை போற்றி, கலாம் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம், என்றார்.Tags : Abdul Kalam ,Abdul Kalam: Vijayakanth ,India , Vijaykanth, Malaranjali, Abdul Kalam, Memorial Day
× RELATED தமிழகத்தில் ஆன்லைன் மூலம் நடக்கவுள்ள...