×

அரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறினீரே அதுதான் அய்யா உங்கள் பெருமை : அப்துல் கலாமை நினைவுக் கூர்ந்து வைரமுத்து கவிதை!!

சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவுநாளையொட்டி,அரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறினீரே சலாம் அய்யா கலாம் என தமது ட்விட்டர் பக்கத்தில் கவிப்பேரரசு வைரமுத்து கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு இன்று!!

ஆண்டுதோறும் அப்துல் கலாம் நினைவுதினமான ஜூலை 27-ம் தேதி ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு என்ற இடத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்களும், மாணவர்களும், இளைஞர்களும் நினைவஞ்சலி செலுத்துவர். இந்தாண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெரியளவில் அப்துல் கலாம் நினைவிடத்திற்கு யாரும் செல்லவில்லை. ஆகவே அப்துல் கலாமை நினைவு கூறும் விதமாக அவரது பொன்மொழிகளையும், திருவுருவப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அப்துல் கலாமின் நினைவுநாளை ஒட்டி வைரமுத்து ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஓ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,

கடல்மீனளந்த குடும்பத்தில்
விண்மீன் அளந்ததும்

ராமேஸ்வரத்தின் சந்திலிருந்து
பால்வீதிவரை பயணமுற்றதும்

இந்தியாவின் பெரியவீட்டில்
ஒரு பிரம்மச்சாரியாய்த் தனிமை காத்ததும்
பெருமையல்ல

அரசியல் ஆழி சூழ்ந்தும்
உப்புக்கறை படியாமல் கரையேறினீரே
அதுதான் அய்யா உங்கள் பெருமை

சலாம்–அய்யா
கலாம். எனத் தெரிவித்துள்ளார்.


Tags : sir ,Abdul Kalam ,Vairamuthu , Abdul Kalam, Vairamuthu, Poetry
× RELATED ஆவணம் இன்றி எடுத்து சென்ற ₹1.89 லட்சம் பறிமுதல்