×

திருச்சியில் எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், வங்கி தற்காலிகமாக மூடல்!!!

திருச்சி:  திருச்சி எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து, வங்கியானது  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது சென்னையில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் கொடூர கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்களும், அரசு அதிகாரிகளும் தினந்தோறும் திணறி வருகின்றனர். தற்போது திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3420ஆக உள்ளது. அதில் பூரண குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 2161 ஆக உள்ளது. இந்த நிலையில்,  திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1201 உள்ளது. மேலும்,  உயிர்கொல்லி கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.

இதனால் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் கொரோனா பரிசோதனையானது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது திருச்சி கண்டோன்மென்டில் செயல்பட்டு வந்த எஸ்.பி.ஐ வங்கியில் கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது. அதில் வங்கியில் பணிபுரிந்து வந்த 22 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வங்கியில் பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டு அதில் வங்கி மேலாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  

பின்னர்,  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த நிலையில், மேலும் புதிதாக 22 பேருக்கு கொரோனா கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதால், ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வங்கி கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், வங்கி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Bank ,bank employees ,Trichy ,SBI ,SBI bank employees , SBI bank employees , Trichy ,corona infection
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...