×

கூடலூர் சுற்றுவட்டாரத்தில் தொலை தொடர்பு சேவை இல்லை!: மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதில் சிரமம்..!!

நீலகிரி: கூடலூர் சுற்றுவட்டாரத்தில் தொலை தொடர்பு சேவை இல்லாததால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கூடலூர் அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட 60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பி.எஸ்.என்.எல். சேவைக்காக அமைக்கப்பட்ட கோபுரம் பயன்பாட்டுக்கு வரவில்லை என்பது பொதுமக்களின் புகாராகும். இதனால் அவசர தேவைக்கு தொடர்புக்கொள்ள முடியாத நிலை உள்ளது.

தற்போது மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் தவிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள 3 கிலோ மீட்டர் தூரம் சந்தன மலைப்பகுதிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். தொலை தொடர்பு சேவை கிடைக்காததால் மலைப்பகுதிக்கு செல்லும் போது வனவிலங்குகள் விரட்டுவதாக மாணவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சுமார் 20 ஆயிரம் தொலை தொடர்புகள் இருக்கும் நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் அமைத்துள்ள தொலை தொடர்பு கோபுரத்துக்கு உடனடியாக மின் இணைப்பு கொடுத்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

இதுகுறித்து அங்குள்ள மாணவர்கள் தெரிவித்ததாவது, எங்கள் ஊரில் தொலை தொடர்பு சேவை இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் படிப்பதற்கு சிரமம் ஏற்படுகிறது. நீண்ட தொலைவில் தினந்தோறும் சென்று கல்வி பயின்று வருகிறோம். இப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் வெளியில் சென்று எங்களால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடிவதில்லை. இங்கு அமைக்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல். சேவை கோபுரம் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தால் தாங்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்போம். எனவே பி.எஸ்.என்.எல். நிறுவனம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

Tags : area ,Kudalur , Broadband service , Kudalur ,online classes .. !!
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...