சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் அமைச்சரவை இன்று பதவியேற்பு : 5 தமிழர்கள் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்!!

சிங்கப்பூர் : பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான அமைச்சரவை சிங்கப்பூரில் இன்று பதவியேற்க உள்ள நிலையில், 5 தமிழர்கள் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.  

பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான அமைச்சரவை

கொரோனா தொற்றுக்கு மத்தியில் சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் அமைந்த மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மொத்தம் 26.5 லட்சம் வாக்காளர்கள் இத்தேர்தல் மூலம் 93 எம்பிக்களைத் தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் பிரதமர் லீ சியென் லூங் வெள்ளிக்கிழமை தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார், இந்த அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் மட்டுமின்றி புதிதாக இளையவர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னர் சிங்கப்பூர் அதன் மோசமான நெருக்கடிக்கு செல்லும் இந்த வேளையில் புதிய அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆட்சியில் 15 அமைச்சர்களில் ஆறு அமைச்சர்கள் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

*55 வயதான டாக்டர் டான் சீ லெங் முழு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பிரதமர் அலுவலக அமைச்சராகவும் மனிதவள , வர்த்தக, தொழில் அமைச்சகம் ஆகியவற்றின் இரண்டாம் அமைச்சராகவும் பொறுப்பேற்பார்.

*திரு லாரன்ஸ் வோங் கல்வி அமைச்சராகிறார். திரு டெஸ்மண்ட் லீ தேசிய வளர்ச்சி அமைச்சராகிறார்.

*கல்வி அமைச்சராகப் பணியாற்றிய திரு ஓங் யி காங், அடுத்து போக்குவரத்து அமைச்சராகிறார்.

*முன்பு போக்குவரத்து அமைச்சராக இருந்த திரு கோ பூன் வான் அரசியலிலிருந்து ஒய்வுபெற்விருப்பாதல். அந்தப் பதவிக்கு திரு ஓங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

*சுற்றுப்புற, நீர்வள அமைச்சு அதன் எதிர்காலச் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சகம் என பெயர் மாற்றம் கண்டுள்ளது. அதன் அமைச்சராகிறார் திருவாட்டி கிரேஸ் ஃபூ.

*முன்பு சுற்றுப்புற, நீர்வள அமைச்சராக இருந்த திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சராகிறார்.

*துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், நிதியாமைச்சராகத் தொடர்வதுடன், பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பை ஏற்கிறார்.

*மூத்த துணை அமைச்சர்களாக இருந்த இருவர் அமைச்சர்களாகியுள்ளனர். திரு எட்வின் டோங் கலாச்சார, சமூக, இளையர்துறை அமைச்சராகவும் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் பிரதமர் அலுவலக அமைச்சராகவும் கல்வி மற்றும் வெளியுறவு துறையில் இரண்டாம் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

*திரு டியோ சீ ஹியன் மூத்த அமைச்சராகவும், தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் தொடர்கிறார்.

*திரு தர்மன் சண்முகரத்னம் மூத்த அமைச்சராகவும் சமுதாய கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் தொடர்கிறார்.

*திரு கா. சண்முகம், திரு எஸ் ஈஸ்வரன், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் கடந்த அமைச்சரவையில் வகித்த பதவிகளைத் தொடர்ந்து வகிக்கின்றனர்.

*திருவாட்டி இந்திராணி ராஜா பிரதமர் அலுவலக அமைச்சராகத் தொடர்வதுடன் தேசிய வளர்ச்சி, நிதி ஆகியவற்றின் இரண்டாம் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் அமைச்சரவை பதவியேற்கிறது.

Related Stories: