×

இனி தங்கத்தை காட்சி பொருளாக தான் பார்க்க முடியும் போல : சவரன் ரூ.592 உயர்ந்து ரூ. 39,824-க்கு விற்பனை ; விழிபிதுங்கிய படி நிற்கும் பெண்கள்!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. தங்கம் விலை தொடர்ந்து 7வது நாளாக நேற்றும் அதிகரித்தது. ஒரு கிராம் 5 ஆயிரத்தை நெருங்கி வருவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் உயர்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் நாள்தோறும் புதிய உச்சத்தையும் படைத்து வருகிறது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சி அடையச் செய்தது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி முதல் தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் 37,616க்கு விற்கப்பட்டது. 21ம் தேதி சவரன் 37,736க்கும், 22ம் தேதி 38,184க்கும், 23ம் தேதி 38,776க்கும் விற்கப்பட்டது. 24ம் தேதி 39,080க்கும் 25ம் தேதி சவரன் 39,232க்கும் விற்கப்பட்டது.

இப்படியே விலை உயர்ந்தால் இனி தங்கத்தை காட்சி பொருளாக தான் பார்க்க முடியுமோ? என்று நகை வாங்க நினைத்தவர்கள் எண்ணி பார்க்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இன்று 7வது நாளாக தங்கம் விலை உயர்ந்தது. அதாவது கிராமுக்கு 74 அதிகரித்து ஒரு கிராம் 4978க்கும், சவரனுக்கு 592 அதிகரித்து ஒரு சவரன் 39,824க்கும் விற்கப்பட்டது. இந்த வேகத்தில் தங்கம் விலை உயர்ந்தால் இன்னும் ஓரிரு தினங்களில் சவரன் 40 ஆயிரத்தை கடந்து விடும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.  மேலும் 50 ஆயிரத்தை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் நகை வியாபாரிகள் கூறுகின்றனர். கிராம் 5 ஆயிரத்தை நெருங்கி வருவதால் இனி குண்டு மணி தங்கம் கூட வாங்க முடியாதோ? என்று நகை வாங்குவார் நினைக்க தொடங்கியுள்ளனர். சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.3.90 அதிகரித்து ரூ.70.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : ladies , Gold, shaving, price, jewelry, silver
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து