×

மூச்சுதிணறல் உள்ளவர்களை கண்டறிய கட்டுப்பாட்டு அறையில் தனிப்பிரிவு அமைப்பு: சென்னை மாநகராட்சி முடிவு; தாமதமில்லாமல் அட்மிஷன்

சென்னை: சென்னை மாநகராட்சியில் டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு பணி தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில், மாநகர சுகாதார அலுவலர் ஜெகதீசன், மருத்துவ அலுவலர் ஹேமலதா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியருப்பதாவது: கொரோனா பாதிக்கபட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும் நேரத்தை குறைக்க வேண்டும். முச்சுதிணறல் ஏற்படுவர்களை கண்டறிந்து உடனடியாக கண்டறிய வேண்டும். இதற்காக அவசர கால தனிப்பிரிவு உருவாக்க வேண்டும். இந்த பிரிவின் மூலம் மூச்சுதிணறல் உள்ளவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிக பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களை கண்டறியும் பணி மண்டல வாரியாக நடைபெற வேண்டும். இவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சென்னையில் அதிகம் தொற்று உள்ள தெருக்களில் களப்பணியாளர்கள் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான அறிக்கையை தினசரி சமர்பிக்க வேண்டும். பரிசோதனை மையங்களில் செய்யப்படும் தொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். கொரோனா காலத்தில் அடிக்கடி விடுப்பு எடுப்பவர்கள், முறையாக பதிவேடுகளை பராமரிப்பு செய்யதாவர்களை கண்டறிந்து பணியில் இருந்து உடனடியாக விடுவிப்பதுடன் ஊதிய பிடித்தமும் செய்ய வேண்டும்.

தனியார் நிறுவனங்கள் அவர்களின் செலவில் ஆன்பாடி சோதனை செய்வது தொடர்பாக சுற்றிக்கை அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுகாதாரம் இல்லாத கட்டிடங்கள், காலி இடங்களின் உரிமையாளர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு குறித்து முதலில் நோட்டீஸ் வழங்கப்படும். மீறினால் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து மீறினால் காலி இடங்கள் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது என்று பலகை வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : control room ,suffocation ,Chennai Corporation ,ennai Corporation , Shortness of breath, diagnosis, control room, segregation system, Chennai Corporation decision, admission without delay
× RELATED வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த ₹22 ஆயிரம் சிக்கியது அணைக்கட்டு அருகே