×

எல்லையை கடந்து வந்த நபரால் வடகொரியாவில் முதல் தொற்று: எல்லை நகரம் முழுமையாக சீல்

சியோல்: தென்கொரியாவில் இருந்து சட்ட விரோதமாக எல்லையை தாண்டி வடகொரியாவுக்குள் நுழைந்த நபருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 19ம் தேதி தென்கொரியாவில் இருந்து சட்ட விரோதமாக  வடகொரியாவின் எல்லையோர நகரமான கேசோங்கில் ஒருவர் நுழைந்துள்ளார். வடகொரிய ராணுவ வீரர்கள் அவரை பிடித்து பரிசோதனை நடத்தியதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானால், வடகொரியாவின் முதல் கொரோனா நோயாளியாக இருப்பார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தென் கொரியா சென்ற இவர், தற்போது சட்ட விரோதமாக எல்லை வழியாக ஊடுருவி கேசோங் நகருக்கு வந்துள்ளார். அவர் பாதுகாப்பான இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் கூறுகையில், “கொடிய வைரஸ் நுழைந்து விட்டது,” என குறிப்பிட்டுள்ளார். கேசோங் நகரம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.

* மோசமாக பாதிக்கும்
வடகொரியாவில் மருத்துவ கட்டமைப்புகளும், மருந்து சப்ளையும் மிகவும் மோசமாக இருக்கிறது. இந்நாட்டில் கொரோனா பரவினால் மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படும்.

Tags : outbreak ,North Korea ,border ,border town , Border, person, North Korea, first infection, border city, fully sealed
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...