×

பெண்ணிடம் நகை பறித்த பெயின்டர் சிக்கினார்

புழல்: செங்குன்றம் அடுத்த கிரான்ட்லைன் ஊராட்சிக்கு உட்பட்ட தண்டல்கழனி பாலாஜி நகர் கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் செல்வராணி (36). இவர், கடந்த 20ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது ஒரு மர்ம ஆசாமி ஒருவர் வீட்டுக்குள் புகுந்து 2 சவரன் தங்கச் செயினை பறித்து தப்பினார். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை வியாசர்பாடி சர்மா நகரைச் சேர்ந்த பெயின்டர் வேலை செய்யும் சிவகார்த்தி (24) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 சவரன் தங்கச்சங்கிலி பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.


Tags : painter , Girl jewelry, snatched, painter
× RELATED பவானி ஆற்றில் மூழ்கி பெயிண்டர் பலி