×

விதிமீறி திறந்து இருந்த 10 கடைகளுக்கு அபராதம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே, கொரோனா ஊரடங்கை மீறிய, 10 கடைகளுக்கு கருங்குழி பேரூராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில், மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி தேசிய நெடுஞ்சாலை, பஜார் பகுதிகளில் முழு ஊரடங்கை பொருட்படுத்தாமல் சிலர் கடைகளை திறந்து வைத்திருந்தனர். இது குறித்து கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் விரைந்து சென்று, அங்கு நான்கு டீ கடைகள், நான்கு மளிகை கடைகள், ஒரு காய்கறிகடை, ஒரு ஐஸ்கிரீம் கடை ஆகியவை திறந்து இருப்பதை கண்டறிந்தார். பின்னர், கடைகளை மூட சொல்லி தலா ரூ.1000 என அபராதம் விதித்தார். மேலும், இந்த அபராத தொகையை செலுத்தாதவர்கள் இனி கடையை திறக்க, பேரூராட்சி நிர்வாக சட்ட விதிகளின்படி அனுமதிக்க முடியாது என  செயல் அலுவலர் தெரிவித்தார். இதை தொடர்ந்து உடனடியாக அவர்கள் அனைவரும் அலுவலகம் சென்று அபராத தொகையை செலுத்தினர்.


Tags : shops , Violation, opening, 10 shop, fine
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி