×

கொரோனா ஊரடங்கால் செல்லியம்மன் கோயில் ஆடி திருவிழா ரத்து

செய்யூர்: மதுராந்தகம் அருகேயுள்ள மாரிபுத்தூர் கிராமத்தில் பிடாரி ஸ்ரீ செல்லியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாத தேர் திருவிழா கோலாகலமாகவும், வெகு விமர்சையாகவும் நடக்கும். இந்த விழாவிற்கு சென்னை, புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் மாரிபுத்தூர் கிராமத்தை சுற்றி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அப்போது, கிடாய்கள் வெட்டி, பொங்கலிட்டு செல்லியம்மனை வழிபடுவார்கள். பின்னர், தொடர்ந்து தேர்பவனியும் நடைபெறும். இதுபோன்று, ஆண்டுதோறும் கோலாகலமாக நடந்துவந்த ஆடி மாத திருவிழா, இந்தாண்டு கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பிறப்பித்த ஊரடங்கின் காரணமாக விழா நடை பெறாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்தகவலை அறிந்த பக்தர்கள் ஏமற்றம் அடைந்துள்ளனர்.

Tags : Corona Uradangal Celliyamman Temple Audi Festival , Corona, Celliyamman Temple, Audi Festival, Cancellation
× RELATED திருவாரூர் மாவட்டம்...