×

சிகிச்சை பலனின்றி மின் ஊழியர் பரிதாப பலி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (34). செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த அமல்ராஜ் (35). இருவரும் டிரைவர்கள். இவர்களுடன் மேலமையூரை சேர்ந்த மின் ஊழியரான  ஸ்ரீதர் (45) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவு காரில் திருக்கழுக்குன்றத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்றனர். அப்போது, திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகர் பை-பாஸ் பகுதியில் உள்ள வளைவில் திரும்பும்போது நிலை தடுமாறி, அங்கு  சாலையோரமுள்ள புளிய மரத்தில் வேகமாக மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே கண்ணனும், அமல்ராஜூம் இறந்தனர். இதில், படுகாயமடைந்த ஸ்ரீதரை நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் இறந்தார்.


Tags : Without the benefit of treatment, the electrical worker, dies
× RELATED விபத்தில் தொழிலாளி பலி