×

காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் :காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் மாலை பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் வெயில் கொளுத்தி வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வெயில், மேகமூட்டம் என மாறிமாறி இருந்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து தேதி ஓரளவு பரவலாக மழை பெய்து வருவதால் காஞ்சியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று மாலை  காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

இதனால் காஞ்சிபுரத்தில் பல இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. காஞ்சிபுரத்தில் மூங்கில் மண்டபம், கங்கைகொண்டான் மண்டபம், ரங்கசாமி குளம், கீரை மண்டபம் உள்ளிட்ட பகுதியில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோன்று, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், செய்யூர், திருப்போரூர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : districts ,Chengalpattu ,Kanchi , Kanchi, Chengalpattu, heavy rain, public, joy
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!