×

சோமங்கலம் காவல் நிலைய எஸ்ஐ உட்பட 6 போலீசாருக்கு கொரோனா

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் காவல் உட்கோட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், மணிமங்கலம், சுங்குவார்சத்திரம், சோமங்கலம், ஒரகடம் ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதார துறை வருவாய் துறை, காவல் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அனைத்து துறையினருக்கும் கொரோனா தொற்று பரவி, தற்போது உயிர் இழப்புகளும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சோமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டருக்கு, குற்றப்பிரிவு போலீஸ் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சக போலீசார் பீதியடைந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றுடைய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. நேற்று சோமங்கலம் காவல் நிலைய வளாகத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கபட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த காவல் நிலையத்தை மூட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : policemen ,Corona ,police station ,Somangalam ,SI , Somangalam, Police Station, SI, 6 to Police, Corona
× RELATED புழல் காவல்நிலையத்தில் உருக்குலைந்து...