×

பாஜவின் ஜனநாயக படுகொலை கண்டித்து கவர்னர் மாளிகை முன் இன்று ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: ராஜஸ்தான் மாநிலத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்பதற்காக அந்த மாநில ஆளுநர் மூலமாக பாஜ முயற்சி செய்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகைக்கு முன்பாக (27ம் தேதி) இன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர்கள் ஜெயக்குமார் எம்.பி, வசந்தகுமார் எம்.பி, கே. விஷ்ணுபிரசாத் எம்.பி மற்றும் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் எம்.எஸ். திரவியம், சிவ.ராஜசேகரன், வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அணி தலைவர்கள், நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : BJP ,KS Alagiri ,Governor's House ,announcement , Bajwa's democratic assassination, condemned, Governor's House, before today, protest, KS Alagiri
× RELATED மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்