×

வயதுக்கு மீறிய உறவை உறவினர்கள் கண்டிப்பு 20 வயது காதலனுடன் 40 வயது பெண் தற்கொலை: உத்தமபாளையம் அருகே பரபரப்பு

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே சின்னஓவுலாபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் சசிக்குமார், கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (40), இவர்களுக்கு 10 மற்றும் 8 வயதில் மகன்கள் உள்ளனர். அதே தெருவைச் சேர்ந்தவர் அஜீத்குமார் (20), ஆட்டோ டிரைவர். திருமணமாகாதவர். உறவினர்கள் என்பதால், முத்துலட்சுமி வீட்டுக்கு அஜீத்குமார் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. தகவலறிந்த உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த அஜீத்குமார் நேற்று முத்துலட்சுமியின் வீட்டிற்கு சென்று பேசியுள்ளார். பின்னர் இருவரும் விஷம் குடித்து மயங்கிக் கிடந்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் வந்து இருவரையும் மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் இறந்தனர்.


Tags : suicide , Age-related relationship, relatives strict, 20-year-old boyfriend, 40-year-old woman, suicide
× RELATED சிறுமியிடம் பலாத்கார முயற்சி வாலிபர் கைது