×

மதுரையில் இரட்டைக்கொலை

மதுரை: மதுரை எல்லீஸ்நகர் காலனியை சேர்ந்தவர் முருகன் (45), இவரது தம்பி செந்தில் (40). நேற்று மாலை 6 மணியளவில் வீட்டு வாசலில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் இருவரையும் ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். எஸ்எஸ்.காலனி போலீசார் விசாரணையில், கொலையான இருவரும் கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள்.இப்பகுதி அதிமுக பிரமுகருடைய மகனுக்கும், இவர்களுக்கும் முன்விரோதம் இருந்துள்ளதால் அவர்கள் கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

Tags : murder ,Madurai , Madurai, double murder
× RELATED இளைஞர் செல்வன் கொலை தொடர்பாக ஆய்வாளர்...