×

காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார்(45) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கிள்ளியூர் ஆரம்பசுகாதார நிலையத்தில் சளி மாதிரி சேகரிக்கப்பட்டதில் நேற்று இரவு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona ,Congress MLA ,Congress , Congress MLA, Corona Infection
× RELATED நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி