×

சென்னை மேற்கு, தெற்கு திமுக மாவட்ட சட்டமன்ற தொகுதிகள் மாற்றம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:  சென்னை மேற்கு, தெற்கு திமுக மாவட்டத்துக்கான சட்டமன்ற தொகுதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: கட்சி நிர்வாக வசதிக்காகவும், கட்சி பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், சென்னை மேற்கு மற்றும் சென்னை தெற்கு ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றப்பட்டுள்ளது. சென்னை மேற்கு மாவட்டம்-சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி. ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், தியாகராயர் நகர், மயிலாப்பூர். சென்னை தெற்கு மாவட்டம்- மதுரவாயல், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர். இவ்வாறு பிரிக்கப்பட்ட சட்டமன்றத்  தொகுதிகளின் அடிப்படையில் சென்னை மேற்கு மற்றும் சென்னை தெற்கு மாவட்ட கழகங்கள் செயல்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Tags : Assembly constituencies ,MK Stalin ,Chennai West ,announcement , Ceṉṉai mēṟku, teṟku timuka māvaṭṭa, caṭṭamaṉṟa tokutikaḷ, māṟṟam, mu.Ka.Sṭāliṉ
× RELATED பதிவு திருமண நடைமுறையில் மாற்றம்