சாவிலும் இணை பிரியா தம்பதி; மனைவி இறந்த சோகத்தில் கணவரும் சாவு: ஒரே வண்டியில் உடல்கள் எடுத்துச்சென்று தகனம்

திருவையாறு: தஞ்சை அருகே மனைவி  இறந்த சோகத்தில் கணவரின் உயிரும் பிரிந்தது. தஞ்சை மாவட்டம் திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சுப்புராவ்(92).  சென்னை பிரசிடன்சி கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு  பெற்றவர். இவரது மனைவி ஹேமா(88). இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. கடந்த 3 ஆண்டுகளாக திருவையாறு தியாகராஜர் காலனியில் உள்ள தனது உறவினர் வீட்டில்  தங்கி வசித்து வந்தனர். நேற்றுமுன்தினம் மாலை 4.30 மணியளவில் உடல்நிலை சரியில்லாமல் ஹேமா இறந்ததால் தனக்கு இனிமேல் யாரும் இல்லையே என்ற மனவேதனையில் சுப்புராவ் காணப்பட்டார்.

மனைவி இறந்த ஒன்றரை மணி நேரத்தில் மாலை 6மணியளவில் சுப்புராவும் இறந்தார். இதையடுத்து இருவரது  உடல்களையும் நேற்றுகாலை ஒரே வண்டியில் எடுத்து சென்று திருவையாறு சுடுகாட்டில் உறவினர்கள் தகனம் செய்தனர். இந்த சம்பவம் திருவையாறு பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: