×

தா.பழூர் அருகே இடி விழுந்து கோயில் கோபுரம் சேதம்: கலசம் கீழே விழுந்தது

தா.பழூர்: தா.பழூர் அருகே இடி விழுந்து கோயில் கோபுரம் சேதமடைந்த நிலையில் கோபுர கலசம் கீழே விழுந்தது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக நேற்று மாலை 6 மணியிலிருந்து 11 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்தது. தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி கிராமத்தில் அய்யனார் கோயில் உள்ளது.

நேற்று 5 மணி நேரம் பெய்த இடியுடன் கூடிய பலத்த மழையில் அய்யனார் கோயில் மேல் நேற்று மாலை இடி விழுந்தது. இதில் கோயில் கோபுரத்தில் உள்ள கோபுரம் சிதைந்து அதில் பொருத்தியிருந்த கலசம் கீழே விழுந்தது. இன்று காலை அங்கு வந்த அப்பகுதியினர் கோபுரத்தில இருந்த கலசம் கீழே விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : tower ,thunder ,Dhaka , Dhaka, thunder, temple tower, damage
× RELATED செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு லாரியை சிறைபிடித்து போராட்டம்