×

இந்தியாவுடன் பிரான்ஸ் இணைந்து செயல்படும்: மிராஜ் முதல் ரபேல் போர் விமானம் வரை நமது கூட்டணியில் புதிய உச்சம்: பிரான்ஸ் நாட்டு தூதர் ட்விட்..!!

டெல்லி: கார்கில் போரில் இந்தியாவின் வெற்றியை கொண்டாடும் வகையில் போரில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீர்ர்களின் தியாகத்தை நினைவு கூறுவதை ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் தினம் கொண்டாடும் வகையில் இன்று 21வது கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கிடையில், கார்கில் போரின் போது இந்தியாவுக்கு இஸ்ரேல் தனது முழு ஆதரவை அளித்தது. அதேபோல் பிரான்ஸ் நாடும் இந்தியாவுக்கு போர் விமானங்களை வழங்கி ஆதரவு அளித்துள்ளது.

இதில், குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மிராஜ் 2000 ரக போர் விமானம் கார்கில் போரில் திரும்பு முனையாக அமைந்தது. இஸ்ரேல் வழங்கிய லேசர் குண்டுகளை பிரான்ஸ் தயாரிப்பான மிராஜ் 2000 போர் விமானத்தில் பொருத்தி பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா வீசியது. இந்த குண்டுவீச்சு தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் உருகுலைந்தன. கார்கிலில் இந்தியா வெற்றிபெற இந்த மிராஜ் ரக போர் விமானத்தில் பங்கு முக்கியமானதாகும்.

தற்போது பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா 36 அதிநவீன ரபேல் ரக போர் விமானத்தை பெற உள்ளது. அதன் முதல் பகுதியாக 6 ரபேல் போர் விமானங்கள் நாளை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதனிடையே, கார்கில் வெற்றியின் 21 ஆவது ஆண்டு இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவின் கார்கில் வெற்றிக்கு பிரான்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதர் இம்மானுவேல் லினன் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் , ’’கார்கில் வெற்றி நாளான இன்று இந்திய பாதுகாப்பு படையினருக்கு பிரான்ஸ் மரியாதை செலுத்துகிறது. இந்தியாவுடன் எப்போது பிரான்ஸ் இணைந்து செயல்படும். கடந்த 1999ம் ஆண்டு மிராஜ் விமானம் முதல் 2020 ரபேல் விமானம் வரை நமது கூட்டணி புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : France ,India ,From Mirage to Rafale ,From Mirage to Raphael , India, France, Alliance, New Summit, Ambassador of France
× RELATED புகைப்பிடித்துக் கொண்டே விமான...