×

நாமக்கல் மாணவி கனிகாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்: கடுமையான சூழலிலும் மாணவர்கள் சாதிக்கிறார்கள்..மோடி பெருமிதம்..!!

நாமக்கல்: கடுமையான சூழலிலும் சாதிக்கும் மாணவர்கள் நமது நாட்டில் அதிகம் இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சி.பி.எஸ்.சி. பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவியுடன் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது கனிகாவுக்கு பிரதமர் வாழ்த்து கூறினார். மேலும், நாமக்கல் மாவட்டம் என்றால் மிகப்பெரிய ஆஞ்சநேயர் கோவில் தான் நினைவுக்கு வரும் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இனி மாணவி கனிகாவின் பெயரும் நினைவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று தேர்வுகளில் சாதித்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இதுபோன்று மற்றவர்களுக்கு முன் மாதிரியாக புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய வெற்றி கதைகளை அதிகளவில் அனைவருக்கும் பகிரும்படி இளைஞர்களை அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, மாணவி கனிகாவின் தந்தை ஓட்டுநராக பணிபுரியும் நிலையில், கனிகாவின் சகோதரி மருத்துவ படிப்பு படித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இதுகுறித்து மாணவி கனிகா கூறியதாவது, தேர்வில் 486 மதிப்பெண்கள் மட்டுமே எடுப்பேன் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது 490 மதிப்பெண்கள் பெற்று இருப்பதாக கூறினார். இந்நிலையில், பிரதமர் மோடி தமக்கு வாழ்த்து கூறியது மேலும் ஊக்கத்தை அளிப்பதாக மாணவி கனிகா மகிழ்ச்சி தெரிவித்தார்.

Tags : Modi ,Kanika ,discussion ,Namakkal , Namakkal, student Kanika, Prime Minister Modi
× RELATED கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்