×

உச்சநிலையில் கொரோனா....! தமிழகத்தில் மேலும் 6986 பேருக்கு பாதிப்பு; ஒரே நாளில் 85 பேர் உயிரிழப்பு; சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் மேலும் 6986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,06,737-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,36,861-லிருந்து 13,85,522-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31,358-லிருந்து- 32,063ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,49,432-லிருந்து 88,55,77-ஆக உயர்ந்துள்ளது. கொரேனா பாதித்த 4,67,882 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 6986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,56,526 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 5,471 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 3,494- ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,155 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 94,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 116 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 53,703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 23,51,463 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 68 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 73.23% ஆக உள்ளது.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 64,129 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 6,986 பேருக்கு தொற்று உறுதியானது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,29,768 ஆண்கள், 83,932 பெண்கள், 23 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

     ^ மகாராஷ்டிரா - 01
     
     ^ டெல்லி - 05

     ^ கேரளா - 09

     ^ கர்நாடகா - 20

     ^ ஆந்திரப்பிரதேசம் - 06

     ^ உதிர்ப்பிரேதேசம் - 08

     ^ புதுச்சேரி - 07

     ^ ஒடிஷா - 01

     ^ ராஜஸ்தான் - 03

     ^ சத்தீஸ்கர் - 01

     ^ மேற்கு வங்கம் - 02

     ^ ஜம்மு-காஷ்மீர் - 01

     ^ பீகார் - 02

* வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

     ^ சவூதி அரேபியா - 01

     ^ சிங்கப்பூர் - 01

     ^ கத்தார் - 04

Tags : deaths ,Corona ,Tamil Nadu , Corona, Tamil Nadu, fatality, health department
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...