பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் பிரபல இயக்குனர் மகேஷ் பட்டிற்கு சம்மன்: நாளை நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவு..!!

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் பிரபல இயக்குனர் மகேஷ் பட்டிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மரணம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலிவுட் நட்சத்திரங்களின் வாரிசுகளே சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சுஷாந்தின் மரணம் குறித்து மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுஷாந்துக்கு நெருக்கமானவர்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சுஷாந்த் சிங்கை தற்கொலைக்குத் தூண்டியதாக பாலிவுட் பிரபலங்கள் சல்மான் கான், கரண் ஜோகர், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 8 பேர் மீது சுதீர் குமார் என்னும் வழக்கறிஞர் பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சல்மான் கான் உள்ளிட்ட இவர்களின் அழுத்தம் காரணமாக சுஷாந்த் 7 திரைப்படங்களில் இருந்து தொடர்ச்சியாக நீக்கப்பட்டதாகவும், அதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் வழக்கறிஞர் சுதீர் குமார் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மரண வழக்கில் திரைப்பட பிரபலங்கள் விசாரணைக்கு உட்பட்டு வருகின்றனர். தற்போது, பிரபல இயக்குனர் மகேஷ் பட்டிற்கு சம்மன் அனுப்பப்பட்டு நாளை மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Related Stories:

>