×

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் இடது கை செயலிழப்பு: மருத்துவர்கள் தகவல்

மதுரை: சாத்தான்குளம் முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் இடது கை செயலிழந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ் ணன், காவலர்கள் என, 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கை விசாரிக் கும் சிபிஐ குழுவினர் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 8 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை சிறையில் வழக்கம் போல் எலும்பு சிகிச்சை மருத்துவர் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தார்.

அப்போது, சாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 பேரும் ஆய்வு செய்யப்பட்டபோது, தனக்கு பின்பக்க கழுத்தில் தொடர்ந்து வலி இருப்பதாக ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை 9 மணிக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவருக்கு கழுத்து வலிக்கான ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ஸ்ரீதரின் இடது கை செயலிழந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் செய்த நிலையில் இடது கை செயலிழந்தது தெரியவந்துள்ளது. 2013ல் விபத்து ஒன்றில் சிக்கிய போது ஸ்ரீதரின் முதுகு தண்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆய்வாளர் ஸ்ரீதரின் இடது கை செயலிழந்தை அடுத்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.



Tags : Sathankulam ,police inspector ,Doctors ,Sreedhar , Sathankulam, father-son murder, Police Inspector Sridhar, Hospital
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...