×

சித்தூரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயி நாகராஜுக்கு திரைக்கலைஞர் சோனு சூட் உதவி

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூரில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயி நாகராஜுக்கு பாலிவுட் நடிகர் சோனு உதவி செய்துள்ளார். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், விவசாயிகள் விவசாயத்தை தொடங்கியுள்ளனர். மதனபல்லியை சேர்ந்தவர் விவசாயி நாகேஸ்வர ராவ். இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் தக்காளி பயிரிட முடிவு செய்தார். ஆனால், ஏற்கனவே விளைவித்த தக்காளியை கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்க முடியாததால், கடும்  நஷ்டத்தை சந்தித்தார். இதனால், மீண்டும் தக்காளி பயிரிட போதிய பணம் இல்லாத நிலை ஏற்பட்டது.

இதனால், என்ன செய்வது என்று யோசித்த அவர், நேற்று தனது இரண்டு  மகள்களை பயன்படுத்தி நிலத்தை உழுது சீர் செய்தார். தொடர்ந்து அவரது மனைவி விதைகளை தூவினார். இதை அவ்வழியாக சென்றவர்கள் கண்டு சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயி நாகராஜுக்கு பாலிவுட் நடிகர் சோனு உதவி செய்துள்ளார். விவசாயி நாகராஜுக்கு 2 காளைகள் வழங்க உள்ளதாக நடிகர் சோனு டிவிட்டரில் கூறியுள்ளார். மேலும் விவசாயத்துக்ககா தனது 2 மகள்களை பயன்படுத்தாமல் அவர்களை படிக்க வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Nagaraj ,Sonu Sood ,floods ,Chittoor , Chittoor, Curfew, Farmer Nagaraju, Sonu Sood, Assistant
× RELATED சூதாடிய 3 பேர் கைது