பாகிஸ்தானின் தீங்கிழைக்கும் நோக்கத்தை தோற்கடித்த நமது வீரர்கள் கார்கில் போரில் வீரத்தை காட்டினர்...ஜெ.பி.நட்டா பேச்சு...!!!

டெல்லி; கார்கில் போரில் இந்தியாவின் வெற்றிக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வகையில்,   இன்று  21-ம் ஆண்டு கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, 21 ஆண்டுகளுக்கு முன்பு, நமது துணிச்சலான வீரர்கள் கார்கிலில் வீரம் காட்டினர் மற்றும் கடினமான சூழ்நிலையைத் துணிந்து தங்கள் எல்லைகளை பாதுகாத்தனர்.

அவர்கள் எல்லைகளை பாதுகாத்தது மட்டுமல்லாமல், பாகிஸ்தானின் தீங்கிழைக்கும் நோக்கத்தையும் தோற்கடித்தனர், அதில், சில அமைதியான பகுதிகளில் அமைதியின்மையை உருவாக்க விரும்பியது என்றார். பிரதமரே லடாக் சென்று, நாள் முழுவதும் அங்கேயே தங்கி, கூட்டங்களை நடத்தி, நமது பாதுப்படை வீரர்களின் மன உறுதியை உயர்த்தினார். காயமடைந்த ஜவான்களை சந்தித்தார். பிரதமரின் தலைமையில் 130 கோடி இந்தியர்கள் இராணுவத்துடன் நிற்கிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக இருந்தது என்றார்.

Related Stories:

>