×

சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியீடு: இதுவரை 93,537 பேர் பாதிப்பு; 13,923 பேருக்கு சிகிச்சை...!!!

சென்னை: சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 93,537 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1331 போர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,989 பேர் உயிரிழந்த நிலையில், 77,625 பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 20 பலியாகியுள்ளனர். 1131 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 13,923 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 502 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 58.66 சதவீதம், பெண்கள் 41.34 சதவீதம். நேற்று (25/07/2020 )மட்டும் சென்னையில்  11,037 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இந்நிலையில் சென்னையில், மண்டல வாரியாக  கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

* அந்த பட்டியலில், திருவொற்றியூர் மண்டலத்தில் 407 பேரும், மணலியில் 206 பேரும், மாதவரத்தில் 495 பேரும் சிகிச்சையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

* தண்டையார்பேட்டை மண்டலத்தில் 605 பேரும்,  ராயபுரத்தில் 941 பேரும், திருவிக நகரில் 1,242 பேரும், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* அம்பத்தூர் மண்டலத்தில் 1014 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 1,727 பேரும், தேனாம்பேட்டையில் 1,143 பேரும், கோடம்பாக்கத்தில் 2,291 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* வளசரவாக்கத்தில் 836 பேரும், ஆலந்தூர் மண்டலத்தில் 601 பேரும், அடையாறு மண்டலத்தில் 1,170 பேரும் பெருங்குடியில் 448 பேரும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 295 பேரும், பிற மாவட்டங்களை சேர்ந்த 502 பேர் கொரோனா   பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags : Corona ,Chennai Zone , Chennai Zone wise Corona vulnerability release: 93,537 cases so far; Treatment for 13,923 people ... !!!
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...