×

கோவாக்சின் தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பா?: ஊடரங்கு காலத்தில் 5-வது முறையாக இன்று மன் கி பாத்தில் பிரதமர் மோடி உரை..!!!

டெல்லி: ஊடரங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் 5-வது முறையாக பிரதமர் மோடி இன்று மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். கடந்த 2014ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன்    உரையாற்றும் வகையில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கினார். இந்தியாவின் பெரும்பான்மையாக மக்களிடம் இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் வகையில், வானொலி வாயிலாக ஒளிபரப்ப முடிவு    செய்யப்பட்டது. தொடர்ந்து, அகில இந்திய வானொலி மூலமாக முதல் முறையாக 2014 விஜயதசமியன்று (அக்டோபர் 03) தனது முதல் உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.

அப்போது, முதல் மாதம் ஒரு முறை என கடந்த பிப்ரவரி வரை தொடர்ந்து 53 மன் கி பாத் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர்   மோடி, மன் கி பாத் நிகழ்ச்சியை 2019 ஜூன் 30-ம் தேதி மீண்டும் தொடங்கினார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

இதன்படி, இன்று மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரதமர் நரேந்திர மோடி காலை 11 மணிக்கு மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். கொரோனா பரவலை தடுக்க ஊடரங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் 5-வது  முறையாக மன் கி பாத்’ நிகழ்ச்சி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மேலும், பிரதமராக 2 முறை நரேந்திர மோடி பதவியேற்று இன்று 13-வது மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்ததது.

இன்றைய உரையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது மற்றும் ஊரடங்கு தளர்வு குறித்து உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கொரோனாவை தடுக்க உருவாக்கப்பட்டுள்ள கோவாக்சின் என்ற மருந்தை சுதந்திர  தினமான ஆகஸ்ட் 15ம் தேதி செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி குறித்தும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.


Tags : announcement ,Kovacs , Important announcement on Kovacs vaccine?
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...