×

பாஜவோடு சேர்ந்து பாமக கூட்டணி கச்சேரி நடத்துவது இட ஒதுக்கீடு வழக்கிற்கு பாதிப்பு ஏற்படுத்தி விடக்கூடாது: கே.பாலகிருஷ்ணன் அறிக்கை

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்   கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை: மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு வேண்டுமென தமிழக கட்சிகளும், அரசும் வழக்கு தொடுத்துள்ள போது, பாமக மட்டும் 27% இடஒதுக்கீடு போதும் என மனு செய்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தோம். இதற்கு பதிலளிக்கும் வகையில் பாமக தலைவர் விரிவான அறிக்கையை அளித்திருக்கிறார்.  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை குறித்த தீர்ப்பு ஜூலை 27ம் தேதி வழங்கப்பட உள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தமிழக அரசு வழங்கும் இடங்களில் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிப்படி, தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டத்தின்படி ஓபிசி 50 சதவீதம், எஸ்.சி.18 சதவீதம், எஸ்.டி. 1 சதவீதம் என வழங்கிட வேண்டுமென பிரதான அரசியல் கட்சிகள் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் வழக்கறிஞர்கள் வாதங்களையும், ஆதாரங்களையும் எடுத்து வைத்துள்ளனர். இவர்களோடு பாமகவும் சேர்ந்திருந்தால் இந்த குரலுக்கு மேலும் வலுச் சேர்ந்திருக்கும். ஆனால் பாஜகவோடு சேர்ந்து பாமகவும் கூட்டணிக்கச்சேரி நடத்துவது வழக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதே தமிழக மக்களின் கவலையாகும்.

Tags : BJP ,alliance concert ,concert ,K. Balakrishnan Alliance , BJP, PMK alliance, concert, reservation, palakirusnan
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு