×

கீழடி 6ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமான சுவர்கள்கண்டுபிடிப்பு

திருப்புவனம்: கீழடியில் நடக்கும் 6ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமான சுவர்கள் சிதிலமடைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் 6ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதில் இணைப்புக்குழாய், தங்கக்காசு, முதுமக்கள் தாழிகள், குழந்தைகளின் எலும்பு கூடுகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கீழடியில் கதிரேசன் என்பவரது நிலத்தில் 12 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி நடந்து வருகிறது.  இந்த நிலத்தில் விலங்கின் எலும்பு கண்டறியப்பட்ட குழிக்கு அடுத்த குழியில், நீண்ட செங்கல் கட்டுமான சுவர்கள் சிதிலமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீள்வடிவ சுவரின் அருகில் மற்றொரு சுவரும் உள்ளது. இந்த சுவர் தென்பகுதியில் வளைந்து நீண்டு செல்கிறது. சுவர் முழுமையாக கிடைக்கவில்லை. அடுத்த கட்ட குழிகள் தோண்டும்போது இந்த சுவர் கிடைக்க வாய்ப்புள்ளது. கீழடியில் தொடர்ந்து பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டு வருவதால் தொல்லியல்துறையினர் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Excavation, brick construction walls
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...