×

ஜெர்மன், நெதர்லாந்தில் இருந்து கடத்திய போதை மாத்திரைகள் பறிமுதல்

மீனம்பாக்கம்: ஜெர்மன் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் இருந்து சரக்கு விமானத்தில் சென்னை வந்த பார்சல்களை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சென்னை, சேலம் மற்றும் புதுச்சேரி முகவரியில் வந்த 4 பார்சல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவற்ைற பிரித்து பார்த்தனர்.  அவற்றில் போதை மாத்திரைகள் மற்றும் போதை பவுடர்கள் இருத்தன. மனித மண்டை ஓடு மற்றும் விலங்குகள் வடிவிலான போதை மாத்திரைகளும் இருந்தன.

மொத்தம் 278 போதை மாத்திரைகளும், 7 கிராம் போதை பவுடரும் இருந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.9 லட்சம். இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த இளைஞர், பாண்டிச்சேரி ஆரோவில் பகுதியை சேர்ந்த  இளம்பெண்ணை கைது செய்தனர்.Tags : Netherlands ,Germany , German, Netherlands, drugs, confiscated
× RELATED 40 குவார்ட்டர் பறிமுதல்