×

கொரோனா தொற்றுக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சோழவரத்தை சேர்ந்த சகுந்தலா (52) என்பவர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 4ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை மூலக்கடையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சகுந்தலா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதே அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு அதிகாரி கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Deputy Regional Development Officer , Corona, Deputy Regional Development Officer, casualty
× RELATED கொரோனா தொற்றுக்கு திமுக கவுன்சிலர் பலி