×

தனிமைப்படுத்தப்பட்ட வாலிபர் தற்கொலை: திருவேற்காடு அருகே பரபரப்பு

பூந்தமல்லி: திருவேற்காடு அடுத்த கீழ் அயனம்பாக்கத்தை சேர்ந்த 37 வயதுடைய நபர் சொந்தமாக டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்  பரிசோதனை செய்து கொண்டார். அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சாலிகிராமத்தில் கொரோனா தனிமைப்படுத்தும் முகாமில் தங்கி சிகிச்சை பெற்று திரும்பிய அவர், நேற்று முன்தினம் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அந்த நபர் நேற்று  வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார துறையினர் இறந்த நபரின் சடலத்தை மீட்டு பாதுகாப்புடன் தகனம் செய்தனர்.


Tags : Thiruverkadu , Youth, Suicide, Thiruverkadu
× RELATED மினி வேனில் வாலிபர் தற்கொலை