×

ஏடிஎம்மில் பேட்டரி திருடிய டிரைவர், கிளீனர் சிக்கினர்

பொன்னேரி: பொன்னேரி அடுத்த மெதூரில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் உள்ளது. நேற்று முன்தினம் வங்கிக்கு சொந்தமான காரில் டிரைவர் சத்யா (40), கிளீனர் பிரசாந்த் (27) ஆகியோர் புதிய பேட்டரிகளை கொண்டு வந்து ஏடிஎம்மில் மாற்றுவதற்கு வந்தனர். பின்னர் அவர்கள், பேட்டரி திருடுபோய்விட்டதாக வங்கிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, பொன்னேரி எஸ்பிஐ வங்கி கிளை மேலாளர் ஜவகர், பொன்னேரி போலீசில் புகார் செய்தார். இதன்படி எஸ்.ஐ. மகாலிங்கம் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஏடிஎம் மையத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து சத்யா மற்றும் பிரசாந்த்திடம் விசாரித்தனர்.

அப்போது, டிரைவர் சத்யாவும், கிளீனர் பிரசாந்தும் சேர்ந்து பேட்டரியை திருடிவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து கார் மற்றும் பேட்டரிகளை பறிமுதல் செய்தனர். இருவரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.


Tags : cleaner , ATM, battery, driver, cleaner
× RELATED நள்ளிரவில் ஆம்புலன்சில் அழைத்துச்...