×

உத்திரமேரூர் அருகே நெல்லி கிராமத்தில் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் இருளர் இன மக்கள்: காலி குடங்களுடன் அலையும் அவலம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே நெல்லி கிராமத்தில், தண்ணீர் கிடைக்காமல் இருளர் இன மக்கள் தவிக்கின்றனர். உத்திரமேரூர் அடுத்த நெல்லி கிராமத்தில் இருளர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 18 இருளர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் உள்ள விவசாய கிணற்றில் தண்ணீர் எடுத்து பயன்படுத்துகின்றனர். கோடைகாலம் வந்தால் விவசாய கிணறும் வற்றி, இவர்களது குடிநீர் தேவை கேள்விக்குறியாக மாறிவிடும். இதற்காக அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று, குடங்களில் குடிநீர் கொண்டு வரும் அவல நிலை ஏற்படுகிறது.

இதனால், இருளர் குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என பல்வேறு அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தும், இதுவரை சீரமைக்காமல், மெத்தனமாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம், கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பாக இருக்கும் வகையில், மேற்கண்ட பகுதியில், உடனடியாக குடிநீர் தொட்டியை சீரஅமைத்து தர வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.


Tags : village ,Nellie ,Uttiramerur , Uttiramerur, Nelly village, water, dark ethnic people
× RELATED தேர்தல் பரப்புரைக்காக நெல்லை...