×

திருக்கழுக்குன்றம்-கல்பாக்கம் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: மரங்கள் சாய்ந்தன

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் , கல்பாக்கம்  சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் வரை கடும் வெயில் இருந்தது. பின்னர், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை சுமார் 3.30 மணியளவில், குளிர்ந்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் அது பலத்த சூறாவளி காற்றாக மாறி பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில், மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. சூறைக்காற்றினால் திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு சாலையின் குறுக்கே 3 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி ஊழியர்கள், சம்பவ இடங்களுக்கு சென்று, அந்த மரங்களை அப்புறப்படுத்தினர். பின்னர், போக்குவரத்து சீரானது. அதேபோல் கல்பாக்கம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், கூவத்தூர் உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

செய்யூர்: செய்யூர் தாலுகாவில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழையும், சில நேரங்களில் மிதமான மழையும் பெய்தது. இதனால் கிராமங்களில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் கணிசமாக உயர்ந்தது. தொடர் மழை பெய்யும் என எண்ணி விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கினர். இந்நிலையில், நேற்று மாலை செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சூனாம்பேடு, பவுஞ்சூர், சித்தாமூர் ஆகிய பகுதிகளை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : areas ,Thirukkalukkunram-Kalpakkam , Screwdriver, boulder, hurricane wind, rain, trees
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...