×

அதிமுகவில் முக்கிய நிர்வாகிகள் கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு

சென்னை: அதிமுகவில் முக்கிய நிர்வாகிகள் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளனர்.    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:     அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் சோமசுந்தரம் மற்றும் அமைப்புச் செயலாளர், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பரஞ்ஜோதி, காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வாலாஜாபாத் கணேசன், நீலகிரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் புத்திச்சந்திரன் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

மேலும், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் ரத்தினவேல், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் மருதராஜ், திருநெல்வேலி புறநகர் மாவட்ட  செயலாளர் பொறுப்பில் இருக்கும் பிரபாகரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் பொறுப்பில் இருக்கும் இளவரசன், இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ரமணா, மாதவரம் ஏ.மூர்த்தி, சின்னையா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், வர்த்தக அணித் தலைவர் பொறுப்பில் இருக்கும் அம்மன் மு. அர்ச்சுணன் ஆகியோரும் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
 இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags : executives ,AIADMK , AIADMK, the party of executives
× RELATED உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை அதிமுக...