×

ஆத்தா ஆடு வளர்த்தா; வாங்க யாருமில்ல! வியாபாரி புலம்பல்

புதுடெல்லி: இஸ்லாமியர்களின் பண்டிகை என்றதும் அனைவரது நினைவுக்கும் சட்டென்று வருவது ‘ பாய் வீட்டு பிரியாணி’ தான்.  முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையன்று, `குர்பானி’ (பகிர்ந்து) கொடுப்பதற்காக ஆடுகள் வாங்கி அதன் இறைச்சியை ஏழைகளுடன் பங்கிட்டு பிரியாணி சமைத்து உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாடுவார்கள். இந்தாண்டு பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ஆடுகள் விற்பனை தமிழகம் உட்பட நாடு முழுவதும் மிகவும் மந்தமாக இருக்கிறது. இதற்கும் காரணம் கொரோனா தான். அனைத்து துறைகளையும் பாதித்த கொரோனா,  ஆடு விற்பனையாளர்களையும், விவசாயிகளையும்  கூட விட்டு வைக்கவில்லை. `ஆத்தா ஆடு வளர்த்தா... கோழி வளர்த்தா...’ ஆனா வாங்குவதற்கு தான் யாரும் வரவில்லை...’ என்று புலம்பும் நிலைக்கு அவர்களை கொரோனா கொண்டு சென்றுள்ளது.

பக்ரீத் பண்டிகை ஆட்டு சந்தை என்றால் எள் பொறுக்க கூட இடமில்லாமல் கூட்டம் அலை மோதும். இப்போது அவை வெறிச்சோடி காணப்படுகின்றன. வாரம் முழுவதும் சந்தையில் காத்திருந்தும் ஒரு ஆடு கூட விற்க முடியவில்லையாம். வழக்கமாக 40 கிலோ எடையுள்ள  ஆடு, ₹30,000 வரை விலை போகும். ஆனால், வருவாயை தொலைத்துள்ள மக்கள், இந்தாண்டு 10,000க்கு மேல் விலை கொடுத்து வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலை தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் நிலவுகிறது.

வியாபாரி புலம்பல்
``ஒரு ஆட்டை பராமரிக்க ஓராண்டுக்கு 10,000 வரை செலவாகிறது. அவற்றை பராமரிக்கும் இடத்துக்கும் மாதம் 7,000 வரை வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. அதனால், ஆடு ஒன்றுக்கு 20,000 என்று விலை நிர்ணயித்தால், 15 ஆயிரத்துக்கு கூட விலை போகவில்லை. அதனால், வந்த செலாவது மிஞ்சட்டும் என்று, நஷ்ட விலைக்கு விற்கிறோம்’’ என்கிறார் உத்தர பிரதேச மாநிலம், அசாத்பூரை சேர்ந்த இசார்.


Tags : Atta ,No one , Islamists festival, goat, merchant
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...